தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் திண்டுக்கல் மண்டலம், தேனி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் ஆகிய கிளைகளில் புதிய 7 நகரப் பேருந்துகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஐ.மகாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
தேனி பாரளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அந்தவகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடைக்கோடிகிராம மக்களும் பயனடையும் வகையில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தேனி மாவட்டத்தில் 1. பெரியகுளம் – வத்தலக்குண்டு (வழி) தேவதானப்பட்டி, 2. பெரியகுளம் – ஆண்டிபட்டி (வழி) ஜெயமங்களம், வைகை அணை 3. தேனி – சின்னமனூர் (வழி) உப்புக்கோட்டை, குச்சனூர் 4. தேனி – திம்மரசநாயக்கனூர் (வழி) க.விலக்கு, ஆண்டிபட்டி 5. போடிநாயக்கனூர் – உத்தமபாளையம் (வழி) சங்கராபுரம், தேவாரம், கோம்பை 6. கம்பம் – உத்தமபாளையம் (வழி) காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி 7. கம்பம் – குமுளி (வழி) கூடலூர், லோயர்கேம்ப் ஆகிய வழித்தடங்களில் 7 புதிய பேருந்துகளை துவக்கிவைக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மேலும் பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகிய அனைத்து தரப்பினர்களும் பயனடைவார்கள். இப்பேருந்து வசதியினை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேனி பாரளுமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, வணிக மேலாளர் திரு.ரவிக்குமார், கோட்டமேலாளர் திரு.முகமது ராவுத்தர் மற்றும் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலைய

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics