தென்தாமரைக்குளம்., நவ. 2.
குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 75க்கும் மேற்பட்ட படைப்புகளை கண்காட்சிக்காக படைத்திருந்தனர். கண்காட்சியில் நவீ அறிவியல் படைப்புகள், மருத்துவ தாவரங்கள், ஊட்டச்சத்துக்கள், சந்திராயன், எரிமலை, ஏ.டி.எம், காற்றாலை, ஹைட்ராலிக் பிரிட்ஜ், எனர்ஜி பார்க், ஜே.சிபி, காற்றாலை, சூரிய குடும்பம் போன்ற மாதிரிகள் படைக்கப்பட்டிருந்தன. அறிவியல் கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கால்வின் தொடங்கி வைத்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை பிரீத்தா ரிச்சர்ட் மற்றும் தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி ஜில்லி ஆல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள்,ஆசிரிய ஆசிரியைகள் கண்டுகளித்தனர்.



