திருப்புவனம்:டிச:23
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் அஞ்சூர் நாடு தேளி கிராமத்தில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் வட மஞ்சு விரட்டு திருவிழா நடைபெற்றது.
இந்த வடமஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சிவகங்கை, மதுரை ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ,திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 15 காளைகள் மற்றும் 135 காளையார்கள் பங்குபெற்றனர். சுமார் 25 நிமிடங்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்ற காளை மற்றும் காளையர் களுக்குள் பரிசு தொகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. காளை உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்நிகழச்சியை விழா கமிட்டியாளர்கள் மற்றும் தேளி கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.