கன்னியாகுமரி செப் 30
குமரி மாவட்டம் கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பதினைந்தாவது வார்டு நிதி குழு மானியம் 2023-2024 கீழ் ரூ 15 லட்சம் செலவில் நடைபெறும் இரு வெவ்வேறு பணியினை மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் டாக்டர்.மெர்லியண்ட் தாஸ், தொடங்கி வைத்தார்.
கீழகட்டிமாங்கோடு வர்த்தகநாடார் குடியிருப்பு சி.எஸ்.ஐ சர்ச் செல்லும் சாலையில் ரூ 10 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைத்தல்,
கீழகட்டிமாங்கோடு அன்னியற்றி குளத்திற்கு செல்லும் கால்வாய் மற்றும் சானலில் ரூ 5 லட்சம் செலவில் சப்பாத்து அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான வேலைகளை நேற்றைய தினம் (29-09-2024 )காலை 10 மணிக்கு வர்த்தக நாடார் குடியிருப்பு சி எஸ் ஐ தேவாலயம் அருகில் வைத்து தொடங்கி வைக்கப்பட்டது. நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்டிமங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஜுபிற்றர் உதயம் தலைமை தாங்கினார். குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கே டி உதயம், முன்னிலை வகித்தார்.
கட்டிமாங்கோடு ஊராட்சி வார்டு உறுப்பினர் சி.முருகேசன், குருந்தன்கோடு (கி ) கழக ஒன்றிய துணை செயலாளர் சுயம்பு ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்வில் அப்பகுதியினர் மற்றும் கட்சியினர் என ஏராளமான கலந்து கொண்டனர்.