அரியலூர், டிச;18
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆனந்தவாடி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சின்னப்பா(45), இவரது மனைவி பச்சையம்மாள்(43). இவர்ளது மகன் பாலமுருகன்(23) சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். மகள் பானுப்பிரியா தாமரைக்குளம் கிராமத்தில் திருமணம் செய்துக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சின்னப்பா தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து பச்சையம்மாளிடம் தகராறில் ஈடுபடுவராம். திங்கள்கிழமை இரவு அவர்களிடையே ஏற்பட்ட தகராறில், பச்சையம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, கை, கால் மற்றும் உயிர்நிலையில் காயங்களுடன் சின்னப்பா தனது வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற இரும்புலிக்குறிச்சி காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து பச்சையம்மாளியம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பச்சைம்மாள், தனது கணவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்