அரியலூர்,மே:30
அரியலூர் மாவட்டம் ,செந்துறை வட்டம், ஆலத்தூரில் இயங்கி வரும் மதராஸ் சிமெண்ட் ஆலை ரசாயனம் கலந்த கழிவுகளை யாணை வாரி ஓடையில் வெளியேற்றுவதால் ஓடையின் நீர் மாசு போடுவதுடன் ஓடையில் உள்ள புல் பூண்டுகள் கூட கருகுகின்றன கோடையில் நீர் அருந்துகின்ற ஆடு மாடுகள் கடுமையான நோய்க்கு ஆளாகின்றன. இதையெல்லாம் மாவட்டத்தில் இருக்கின்ற மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை மாவட்ட நிர்வாகம் மெத்தனபோக்கோடு நடந்து கொள்கிறது. நம்ம பகுதியில் இருக்ககூடிய அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை அவர்களுக்கு கண்ணுக்கு தெரிவதெல்லாம் சிமெண்ட் ஆலை நிர்வாகத்திடம் விலை போவதே, மாவட்டத்திலுள்ள மக்களை காக்கக்கூடிய எந்த ஒரு செயலையும் செய்வது இல்லை எனவே ஆணைவாரி ஓடையில் கலக்கப்பட்ட ரசாயன கழிவுகளை உடனடியாக அகற்ற மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை இருக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்? என தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல பொறுப்பாளர் மக்கள் காவலர் முடிமன்னன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



