கோவை பிப்:08
பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள ஆனைமலை தாலுகா புளியங்கண்டி என்னும் பகுதியில் பூர்வ பழங்குடியினர் பலர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வனத்துறை சார்பில் சுமார் 25 வருடத்திற்கு முன்பு 41 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
தற்பொழுது பராமரிப்புக்காக வருவாய் துறைக்கு மாற்றப்பட்டது. ஆனால் 41 தொகுப்பு வீடுகளும் முழுமையாக சிதலமடைந்தும் மழைக்காலங்களில் தண்ணீர் கசியும் விதமாகவும் கட்டடங்கள் ஆங்காங்கே இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. எனவே தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய கட்டடங்கள் கட்டித் தருவதற்கு மனு அளிக்கப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் செயலாளர் வரதராஜ், துணைச் செயலாளர்கள் செந்தில், மகேஷ் குமார், செயற்குழு உறுப்பினர்கள் தினேஷ், நாகராஜ், குமார், திருமேனி, தொண்டரணி ராம்குமார், லட்சுமணன் மற்றும் கட்சி தொண்டர்கள் இணைந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.