வத்தலகுண்டுவில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி. மூதாட்டி படுகாயம் போலீசார் விசாரணை. பரபரப்பு.
வத்தலகுண்டுவில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார். மூதாட்டி படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே, வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து தெப்பத்துப்பட்டி சென்று கொண்டிருந்த அரசு நகர பேருந்து, பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதில், வத்தலகுண்டுவில் தனியார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றும், திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள, மூலதோப்பைச் சேர்ந்த நந்தகுமார் (20) என்பவர் மூளை சிதறி சம்பவ இடத்தில் பலியானார்.
இதே விபத்தில் தாறுமாறாக ஓடிய, பேருந்து மோதிய விபத்தில் மார்க்கெட்டுக்கு வந்த, வத்தலக்குண்டு அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (62) இரண்டு கால்கள் உடைந்து படுகாயம் அடைந்தார். அவரை தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேர்த்துள்ளனர்.
இந்த விபத்தில் காளியம்மன் கோவிலில் வெளியூர்களுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள், பயணிகள் அலறி அடித்து ஓடினர். அரசு நகர பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியாகி, ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் இந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.