மதுரை மாவட்டம் சக்குடியில் ஸ்ரீ முப்புலிசாமி கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ஏற்பாட்டில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்குடி ஊராட்சியில் ஸ்ரீமுப்புலி சுவாமி கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் பி.ஆர் இராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வணிகவரி துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் வருவாய் கோட்டாட்சியர், கிழக்கு வட்டாட்சியர் கால்நடை துறை இணை இயக்குநர். முன்னிலையில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்க
மதுரை. திருச்சி.
புதுக்கோட்டை தேனி திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான காளைகள் வந்து களமிறங்கின முக்கியமாக பரிசுகள் எதுவும் இல்லாமல் லாப நோக்கமில்லாமல் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் கலந்து கொண்ட மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வேஷ்டி துண்டுகள் வழங்கபட்டன. ஜல்லிக்கட்டையொட்டி காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சுகாதார துறை சார்பில் மருத்துவ முதலுதவிகளும் மதுரை மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.