வேலூர்=18
மாநகராட்சி அலுவலகத்தில் தண்ணீர் குடிப்பதற்காக வைக்கப்பட்ட பானையில் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் வேதனை.
வேலூர் மாவட்டம் (இன்ஃபான்ட்ரி) சாலையில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது அந்த அலுவலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், மற்றும் வரி கட்டுதல், இ சேவை மையம், நில அளவு பிரிவு அலுவலகம் என பல்வேறு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு சுமார் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என வந்து செல்லும் ஒரு முக்கியமான அலுவலகம்மாக செயல்பட்டு வரக்கூடிய அலுவலகத்தில் உள்ளே இரண்டு ( மின் தூக்கிகள், LIFT ) செயல்பட்டு வருகிறது
இதில் இரண்டாவது மின் தூக்கி பாதிலேயே நின்றதால் அச்சமடைந்து பொதுமக்கள் அலறி உள்ளனர் அதன் பின் உள்ள இருந்த எமர்ஜென்சி அலாட் அடிக்கப்பட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் எமர்ஜென்சி சாவியை வைத்து திறந்து
மின் தூக்கில் மாட்டிக் கொண்ட நபர்கள் வெளியே வந்து பெருமூச்சு விட்டனர்.
பின்பு அங்கு வந்த மின்தூக்கி அழுது சீரமைக்கும் ஊழியர்கள். மின் தூக்கி பழுதான காரணம் ஆய்வு செய்து பார்த்த பிறகு அந்த மின் தூக்கியில் அதிக நபர்கள் ஏறியதால் மின்தூக்கி பாதியிலேயே நின்று இருக்கலாம் என மின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்
பின்பு மின் தூக்கியும் உடனடியாக நிறுத்தி பழுதான மின் தூக்கியை சீரமைத்து வருகின்றனர் மேலும் வேறு ஏதேனும் பழுது இருந்தால் அதையும் சீர் செய்து முறையாக வழிமுறைக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோன்று வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி தாண்டி வெப்பமானது பதிவாகி வருகிறது இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் என பல்வேறு பணிக்காக வந்து செல்லக்கூடிய இடத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவள் நிலையும் ஏற்பட்டுள்ளது.