நாகர்கோவில் மே 30
நாகர்கோவில் மாநகராட்சி 33-வது வார்டு மேலச்சூரன்குடி சுடலைமாடன் கோவில் முன்புறம் நின்ற அரசமரம் தற்போது சூறைக்காற்றுடன் பெய்து வரும் கன மழையால் ரோட்டில் சாய்ந்து விழுந்தது.
இந்த தகவல் அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி துணைமேயர்
மேரி பிரின்சி லதா உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கும்,மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் விழுந்த மரம் மற்றும் மின் கம்பங்களை உடனடியாக மாற்றவில்லை என்றால் இந்த சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்ற பொதுமக்கள் பாதிப்படைவார்கள் என தெரிவித்து நடைபெற்ற சீரமைப்பு பணிகளை உடனிருந்து பார்வையிட்டு நடைபெற்று வந்த பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.