நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிறுவப்பட்ட நூலகம், அறிவுசார்மையத்தில் படித்து போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற இளைஞர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார்மையம் மூலம் அரசின் போட்டி தேர்வுகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதால் அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி மாணவர்கள் தங்களது அறிவு திறனை வளர்த்து கொள்ளும் வகையிலும், வாசிப்பு திறனை அதிகரிக்கவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலும் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 190 அறிவுசார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் ஒன்றாக திருவாரூர் தெற்கு வீதியில் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு தமிழக முதல்வரால் கடந்த ஜனவரி மாதம் 5 ம் தேதி காணொளி மூலம் அறிவுசார் மையம் திறக்கப்பட்டது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையமானது 4 ஆயிரத்து 506 சதுர அடி பரப்பளவில் வரவேற்பு அறை, கலந்தாய்வு கூடம், படிப்பகம் மற்றும் குழந்தைகள் படிப்பகம், இணையதள வசதியுடன் கூடிய கணினி அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஜெனரேட்டர் வசதி மற்றும் கழிப்பிட வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
மேலும், சிசிடிவி கேமரா, ஸ்மார்ட் கிளாஸ், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி இடங்களில் நூலக வசதி, குரூப் 1 முதல் குரூப் 4 உள்ளிட்ட அனைத்து விதமான மாநில அரசு மற்றும் மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு உரிய புத்தகங்கள், காவலர் தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர் தகுதி தேர்விற்குரிய புத்தகங்கள் என விலை உயர்ந்த 2 ஆயிரத்து 900 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் திறனறிவு தேர்விற்குரிய புத்தகங்கள் மற்றும் இதர நூலக புத்தகங்கள் போன்றவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் இந்த அறிவுசார் மையத்தில் உள்ள புத்தகங்களை படித்து ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு மற்றும் 2.ம் நிலை காவலர் தேர்வு எழுதிய 10.க்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகியுள்ளனர்.
இதில், குரூப் 4 தேர்வில் திருவாரூர் கீழவீதியை சேர்ந்த பிஇ பட்டதாரி மாணவர் மகாபிரபு (26) 300-க்கு 265.5. மதிப்பெண்களும், திருவாரூர் சேந்தமங்கலத்தை சேர்ந்த பட்டதாரியான பிரகாஷ் (27) 246 மதிப்பெண்களும், தர்மகோவில் தெருவை சோந்த முதுகலை பட்டதாரி அட்சயா (26) 243 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தமிழக அரசு இதுபோன்று ஒரு அறிவுசார் மையத்தினை அமைத்ததன் காரணமாகவே புத்தகங்களை படித்து தேர்வில் வெற்றி பெற முடிந்ததாக பெருமையுடன் தெரிவித்த வெற்றியாளர்கள் இதற்காக தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
தொகுப்பு:-
மீ.செல்வகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருவாரூர் மாவட்டம்.