By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் முதல்வர் பெருமிதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் முதல்வர் பெருமிதம்
சிவகங்கைமாநிலம்மாவட்டம்

சிவகங்கையில் முதல்வர் பெருமிதம்

Last updated: January 24, 2025 9:39 am
January 24, 2025
39 Views
Share
SHARE

சிவகங்கை: ஜன23

சிவகங்கையில்   நடைபெற்ற அரசு விழாவில் 51 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் 46 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து , 164 கோடியே 1  லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டிலான 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 53 , 039 பயனாளிகளுக்கு 161 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார் . பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நகரம்பட்டியில் 50 – லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப்  போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலையை திறந்து வைத்தார் .

காரைக்குடியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீர கவியரசர் முடியரசனார் திருவுருவச் சிலை அமைக்கவும் , சிவகங்கையில் 1 – கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில்  மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு திருவுருவச்சிலை அமைக்கும் பணிக்கும் வேறு சில பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார் .

 

இதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது:சிவகங்கை மண்ணுக்கு வரும்போது எனக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது . வீரம் பிறக்கிறது ,  மன்னர் முத்துவடுகநாதர் ,  வீரமங்கை வேலுநாச்சியார் , மானம் காத்த மருது சகோதரர்கள் ,  தியாகச் சுடர் குயிலி வாழ்ந்ததும் இதே சிவகங்கைச் சீமையில் தான் . இந்த  மண் வீரத்துக்கு அடிப்படையான , மற்றும் தமிழின் தொன்மையை உலகிற்கு உரைக்கக் கூடிய கீழடி தடயங்களும் கொண்டது இதே சிவகங்கை மண் தான் . இந்த மண்ணில் நடக்கக்கூடிய விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் . மேலும் இன்று  புதிய அறிவிப்புகளையும் அறிவிக்கிறேன் . முதல் அறிவிப்பு : சிவகங்கை மாவட்டத்திற்குரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிதாக 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும் .இரண்டாவது அறிவிப்பு : திருப்பத்தூர் நகரத்திற்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும் . மூன்றாவது அறிவிப்பு : புதிதாக உருவாக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட  ரூபாய் 30 கோடி நிதி உதவி வழங்கப்படும் . தமிழகத்தின்  வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது .ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்தை  பாரபட்சம் பார்த்து ,  எதிரிகளாகவும் பார்த்து திட்டங்களை முடக்குகிறது .இதுபோன்ற தடைகளையும் தாண்டித்தான் தமிழக அரசு செயல்பட்டு மாநில அரசின் நிதியை செலவு செய்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது .

 

ஆனாலும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எதையும் பகுத்துப் பார்க்காமல் தமிழ்நாடு திவலாகிவிட்டது என்கிறார் . அவருடைய எண்ணம் இந்த அரசு திவாலாக வேண்டும் என்று நினைக்கிறாரோ  என்று எண்ணத் தோன்றுகிறது .அவர் போடும் கணக்கு எல்லாம் தப்புக் கணக்கு தான்  தமிழக மக்கள் எங்களுடைய செயல்பாடுகளையும் ,  திட்டங்களையும் கணக்குப் போட்டு முதல் மதிப்பெண் கொடுக்கிறார்கள் அது எங்களுக்கு போதும் . எதிர்க்கட்சித் தலைவர் மற்றொன்றும் சொல்கிறார் .

திமுக ஆட்சிக்கு  13 அமாவாசைகள் தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அவர் இருட்டில் இருந்து கொண்டு காலண்டரை கிழித்துக  கொண்டிருக்கிறார் .இருக்கட்டும் பரவாயில்லை . நாம் மக்களுக்கான நன்மைகளை எண்ணி திட்டங்களை செயல்படுத்துவோம் . மக்களுடைய மகிழ்ச்சிகளை மட்டும் நாம் எண்ணிப் பார்ப்போம்.சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் கொடுத்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பார்க்கும்போது உதயசூரியன் ஒளியில் தமிழ்நாட்டை திமுக தான் வழி நடத்தும் என்பது உறுதியாகிறது . இதற்காக திமுக தொடர்ந்து பாடுபடும் உழைக்கும் .இவ்வாறு அவர் பேசினார் .

 

முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வரவேற்றுப் பேசினார் . விழாவில் அமைச்சர்கள்  பெரிய கருப்பன் , ராஜ கண்ணப்பன் , கோவி செழியன் , சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திப. சிதம்பரம் , சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ,  மாங்குடி , சிவகங்கை நகர் மன்றத் தலைவர் சி.எம். துரைஆனந்த் உள்பட பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி நன்றி கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

கொட்டாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குப்பை கிடங்கில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
பொள்ளாச்சி பி.கே.டி பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டி
விபத்தில்லா. தீபாவளியை வீடு தோரும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!!!

January 28, 2025
29 Views
ஆட்சிப்பணியாளர்கள் சங்க புதிய கட்டிடிடத்திறப்பு
சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்ட 35 பிரியாணி கடை
புதிய கலையரங்கம் பி.டி.செல்வகுமார் அடிக்கல்
குமரி மாவட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏக்கு தொழிலாளர்கள் நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account