காளையார்கோவில்: செப்:10
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள கொல்லங்குடி கிராமத்தில் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் அறங்காவலர் குழுத்தலைவராக கண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வி.சி.கே.கண்ணப்பன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வின் போது. கோவில் அலுவலகத்தில் மண்டல இணை ஆணையர் பாரதி துணை ஆணையர் சங்கர் உதவி ஆணையர் ஞானசேகரன் அறநிலையத் துறை செயல் அலுவலர் நாராயணி மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும் திமுக தலைமைப் பொதுக் குழு உறுப்பினருமான ஏஆர்.ஜெயமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கண்ணப்பன் பதவியேற்றார். இவருடன் இணைந்து உறுப்பினர்களாக சந்திரன் மற்றும் ராணி சீனிவாசன் ஆகியோரும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர்.
பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான ஏஆர்.ஜெயமூர்த்தி பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.