நாகர்கோவில் ஏப் 5
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மாதவன்,மேற்கு மாவட்ட செயலாளர் சபின்,மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் தவெக நிர்வாகிகள் , தொண்டர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.