பொள்ளாச்சி ஜூலை:29
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி பொள்ளாச்சி வேட்பாளர் ஈஸ்வர சாமி அவர்கள் தனக்கு வாக்களித்த பொள்ளாச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சியில் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன்,
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.அமுதபாரதி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் நகர மன்ற உறுப்பினர் எம். கே.சாந்தலிங்கம், நகர மன்ற உறுப்பினர் டேஸ்ட்டி பாலமுருகன், நகர் மன்ற உறுப்பினர் எஸ்.உமா மகேஸ்வரி, நகர துணைச் செயலாளர் ச.தர்மராஜ், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளர் என்.கே பகவதி , காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை கோவை மாவட்ட செயலாளர் கராத்தே பஞ்சலிங்கம்,விசிக மண்டல செயலாளர் சா.பிரபு மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி பல்லடம் ரோடு வீ.விவேக் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, அவைத்தலைவர் பிளம்பர் முருகன், அவர்கள் முன்னாள் வார்டு அவை தலைவர் மயில்சாமி, ஆதிதிராவிடர் நல குழு துணை அமைப்பாளர் முத்துராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி நன்றியை தெரிவித்தனர்.