மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம், சென்னை விருகம்பாக்கம், ஐயப்பன்தாங்கல் ஆகிய இடங்களில் தனது புதிய கிளைகளை கோலகாலமாக தொடங்கி உள்ளது. இந்த புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் என்.பி.குமார் தங்கமயில் குடும்பத்தினருடன் இணைந்து திறந்து வைத்தார்.
தங்க நகை விற்பனையில் 33 ஆண்டுகளாக தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ள இந்த நிறுவனம் 30இலட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழகம் முழுவதும் 60 கிளைகளுடன் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை, தியாகராய நகரில் 60-வது கிளையை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் 61வது கிளையையும், 62வது கிளையை ஐயப்பன்தாங்கலிலும் தொடங்கியுள்ளது.
திறப்பு விழாவின் மிக முக்கிய அம்சமாக ஷோரூம் உள்ளேயே பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி, அதில் “தங்க மாங்கல்யம்” என்னும் தனித்துவமான திருமண நகை கலெக்சன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. திறப்பு விழா சலுகையாக ஒவ்வொரு 10 கிராம் தங்கத்துக்கும் ரூ.3,000 தள்ளுபடி, வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், வைரம் ஒரு காரட்டுக்கு, ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
மேலும், சேமிப்புத் திட்டத்திலும் ஒவ்வொரு 1 இலட்சம் விற்பனைக்கும் நிச்சய பரிசு உண்டு. இச்சலுகை இம்மாதம் (ஏப்ரல்) 22ஆம் தேதி வரை மட்டுமே” என்று இந்த நிறுவனத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தங்கமயில் ஜுவல்லரி புதிய கிளைகள் திறப்பு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics