சுரண்டையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தென்காசி மாவட்டம் சுரண்டையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா முன்னிலையில் தென்காசி மாவட்ட வணிகர் சங்க தலைவர் வைகுண்ட ராஜா தலைமையில் நடைபெற்றது
பொதுக்குழு கூட்டத்தில் தென்காசி மாவட்ட நிர்வாக வசதிக்காக தென்காசி மண்டலத் தலைவர் வைகுண்ட ராஜா பரிந்துரையின் பேரில் தென்காசி மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு முன்னிலையில் அறிவிக்கப்பட்டது பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விக்கிரம ராஜா தெரிவித்ததாவது பொதுக்குழுவில் மொத்தம் 11 தீர்மானங்கள் இயற்றப்பட்டன முக்கிய தீர்மானமாக புளியங்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறிச் சந்தையை விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் , ஆலங்குளம் மாறாந்தை சாலையில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியை உடனடியாக மாநில அரசு அகற்ற வேண்டும் ,தென்காசி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி வேண்டும், சென்னை மதுராந்தகத்தில் மே 5ல் நடைபெறும் 42வது வணிகர் அதிகார பிரகடன மாநாட்டு விழாவிற்கு ஏராளமான பேருந்து ,வேன், கார்களில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மற்றும் தென்காசி மாவட்ட வணிகர் சங்கத்தைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்