சென்னை,
ஜன- 23 முருகப்பா குழுமத்தின் நிதிசார் சேவைகள் நிறுவனமான சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனம் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் மிக தொன்மை வாய்ந்த கைலாச நாதர் திருக்கோவிலில் பக்தர்கள் மற்றும் வருகையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றுடன் தனது ஒத்துழைப்பு செயல்பாட்டை “அடாப்ட் எ ஹெரிடேஜ் 2.0 ” செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பேணி பாதுகாப்பதில் சோழமண்டலத்தின் பணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் மிக தொன்மையான கட்டிடக்கலை அதிசயங்களுள் ஒன்றான கைலாசநாதர் திருக்கோவில், பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையின் மாண்பிற்கும், மரபிற்கும் என்றும் அழியாத ஒரு சான்றாக விளங்குகிறது.
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்படும் “அடாப்ட் எ எரிடேஜ் 2.0 ” என்ற முன்னெடுப்பானது அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் பாதுகாக்கப்பட்ட தொன்மையான நினைவுச்சின்ன வளாகங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் வருகை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்த நினைவுச்சின்னங்கள் அமைந்திருக்கின்ற இடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பெருநிறுவனங்கள், டிரஸ்ட்டுகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் உட்பட, தனியார் துறை அமைப்புகளுக்கும் மற்றும் அரசுக்குமிடையே ஒத்துழைப்பை இச்செயல்திட்டம் வளர்க்கிறது.
தொன்மையான நினைவுச்சின்ன தோழர்கள் என்று அழைக்கப்படும் இந்த அமைப்புகள், இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழியாக, தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் அமைவிடங்களில் வசதிகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் ஒரு பகுதியாக சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனம் இச்சேவை வழங்குகின்றன.