கன்னியாகுமரி அக் 25
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலச்சங்கரன்குழி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரிடம் புத்தளம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் சமூக வலைத்தளம் வாயிலாக பழகி அவரை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவை தற்போது அவர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளதாக அந்த மாணவியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாணவியின் வீடியோவை வாலிபர் பரப்பியதால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி இன்னும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போலீசார் அரவிந்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.