டிச. 27
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் தற்போது சொத்து வரி வீட்டு வரி வணிக நிறுவனங்கள் கம்பெனிகளின் வரி இவற்றின் வரி உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் (குப்பை வரி பாதாள சாக்கடை வரி) மேற்கண்ட கட்டண வரி உயர்வுகளையும் பொதுமக்களின் நலனும் கருதி ரத்து செய்ய வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மாவட்ட பொருளாளர் சந்தோஷ் குமார், தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மனு அளித்தனர்.