மதுரை மாவட்டம் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 70 பயனாளிகளுக்கு ரூ.851,71,000 திட்ட மதிப்பிலான குடியிருப்பு ஆணைகளை பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மகிழ்வுடன் நன்றி.
தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் ஏற்றத்திற்காக எண்ணற்ற அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் 974-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்கள் குடியிருப்பதற்கான வீடுகளைக் கட்டுவதற்காக தொடங்கப்பட்டது. பின்னர் 1980ஆம் ஆண்டு முதல் ஆதி திராவிடர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆதி திராவிடர்களுக்காக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல். ஆதிதிரவிட மக்களின் தேவைக்கேற்ப பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வருத்து தாட்கோ மானியம் மற்றும் வங்கி கடன் உதவியுடன் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம். நிலம் மேம்பாட்டுத் திட்டம் தொழில் முனைவோர் திட்டம். இளைஞர்களுக்கான மருத்துவர்கள் மருத்துவமனை அமைக்க வேலைவாய்ப்பத் திட்டம் செபி திட்டத்தில் இளம் உதவி வழக்கும் திட்டம் மகளி தனிக் குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம் உறுப்பினர்களுக்கு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (HFA) சார்பாக ‘அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மதுரை கோட்டம் மதுரை மேக்கூர் பகுதி II மற்றும் மேலூர் கருத்தப்புலியம்பட்டி திட்ட பகுதியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்ளுக்கு குடியிருப்பு ஆணைகள் வழக்கப்பட்டுள்ளது
மேலும் 2022 – 2023ஆம் நிதியாண்டில் 20 தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்ளுக்கு ரூ.2.30.25,000/- திட்ட மதிப்பில் குடியிருப்பு ஆணைகளும் 2023 -2024-ஆம் நிதியாண்டில் 50 தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்ளுக்கு ரூ.41246,000 திட்ட மதிப்பில் குடியிருப்பு ஆணைகளும் மொத்தம் 79 பயனாளிகளுக்கு ரூ.5171000/- திட்ட மதிப்பில் குடியிருப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் குடியிருப்பு ஆணை பெற்ற மதுரை காளவாசல் பகுதியில் வசித்து வரும் ஜோதி பிரியா தெரிவித்ததாவது-
நான் மதுரை காளவாசல் பகுதியில் வசித்து வருகிறேன். நான் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். மங்களது குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் எங்களால் சொந்தமாக வீடு வாங்குவது என்பது வெறும் கனவே. இந்த சூழ்நிலையில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி (1) மேம்பாட்டு கழகம் (தாட்கோ) அலுவலகத்திலிருந்து போன் செய்து உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். முதலில் இதனை நான் நம்பயில்லை. இருந்தபோதிலும் நான் தோடியாக ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டு கழகம் (தாட்கோ) அலுவலகத்திற்கு சென்று இது குறித்து விசரித்தபோது தமிழ்நாடு முதலமைச்சர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் உண்மையிலே சொந்த வீடு இல்லாதவர்களுக்கும் வீடு வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள் என்று தெரிவித்தனர். வீட்டின் மதிப்பு ரூபாய் இலட்சம் என்று தெரிவித்தார்கள். இந்த பணம் அனைத்தையும் எங்களையே கட்ட சொல்வார்கள் என்று தயங்கிய போது குடியிருப்பு ஆணை பெறுவதற்கு ரூபாய் 75 ஆயிரல் கட்டினால் போதும் என்று
தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து ரூபாய் 75 ஆயிரத்திற்கு வங்கி வரை வோலை பெற்று ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டு கழகம் (தாட்கோ) அலுவலகத்தில் சமர்ப்பித்ததை தொடர்ந்து எங்களுக்கு குடியிருப்பு ஆணை வழங்கப்பட்டது. எங்களைப் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை கருத்திற்கொண்டு இதுபோன்ற திட்டத்தினை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களுடைய குடும்பத்தின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் குடியிருப்பு ஆணை பெற்ற மதுரை அழகர்கோவில் பகுதியில் வசித்து வரும் சுகன்யா தெரிவித்ததாவது.
நான் மதுரை அழகர்கோவில் பகுதியில் வசித்து வருகிறேன். நான் அரசு இராசாசி மருத்துவமனையில் துப்புரவு பணியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். எனது கணவர் இறந்து விட்டார் எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். எங்களது குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம் இந்த சூழ்நிலையில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மே/மேம்பாட்டு கழகம் (தாட்கோ) அலுவலகத்திலிருந்து போன் செய்து உங்களுக்கு விடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
தொகுப்பு:
இ.சாலி தளபதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். மதுரை.
ம.கயிலைச் செல்வம்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), மதுரை.