கன்னியாகுமரி அக் 6
தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதராத்தை மேம்படுத்தவும் அவர்கள் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையில் மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட ஏதுவாக கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் வழிகாட்டுதல் சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட மூன்று மாவட்டங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டது அதன்படி மூன்றாம் கட்ட பயிற்சியானது கடந்த ஜூலை மாதம் 08-ம் தேதி தொடங்கப்பட்டு 90 நாட்கள் நடத்தப்பட்டு நேற்றுடன் நிறைவு பெற்றது. பயிற்சி வகுப்பில் கலந்த கொண்ட பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவை அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு தலா ரூ. 1000/- வீதம் மூன்று மாதங்களுக்கு ரூ. 3000/- வழங்கப்பட்டது.