திண்டுக்கல் மே:24
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து நடத்திய கோடைகால கேரம் பயிற்சி முகாம் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் ஏறத்தாழ 40 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பயிற்சி பெற்றனர்.
இந்த கோடைகால கேரம் பயிற்சி முகாமை திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர்
பி.ஆல்வின் செல்வகுமார், பொருளாளர், எஸ்.மருதமுத்து , செயற்குழு உறுப்பினர்கள் பி. ஜெஸ்பர் செல்வகுமார், சசிபாலா ஆகியோர் சிறப்பாக மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர். கோடைகால கேரம் பயிற்சி முகாமின் இறுதியில், கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் மூன்று பிரிவுகளில் (கேடட், சப்ஜூனியர், ஜூனியர்) போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா மற்றும் கோடைகால கேரம் பயிற்சி முகாம் நிறைவு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் ஸ்ரீவாசவி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஶ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியின் முதல்வர் கோமகள் , திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர்
பி.ஆல்வின் செல்வகுமார், பொருளாளர் எஸ்.மருத முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.