தஞ்சாவூர் ஜூன் 3
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பேராவூரணிஇளைஞர் ஐ எப் எஸ் தேர்வில் வென்றுள்ளார்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கல்லூராணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ரேணுகா தம்பதியின் மகன் புவனேஷ் (வயது 28. ) இவர் இந்திய குடிமை பணியான ஐ எப் எஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது வனத்துறை பணிக்கு தேர்வாகியுள் ளார்.
இதுகுறித்து புவனேஷ் தெரிவித்தது...
கடந்த 2018 ஆம்ஆண்டு முதல் இந்திய குடிமை பணி தேர்வை ஆறாவது முறையாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன் .கடந்தாண்டு தேர்வு எழுத தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தில் எனக்கு ஊக்கத்தொகை யாக ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
கிராமப்புறத்தைச் சேர்ந்த நான் ஐ .எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற நான் முதல்வன் திட்டம் தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார் புவனேஷ்.