திண்டுக்கல்
புறநகர் உட்கோட்ட காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை புறநகர் டிஎஸ்பி சிபிசாய் சௌந்தர்யன் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில்
புறநகர் உட்கோட்ட காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை புறநகர் உட்கோட்ட டிஎஸ்பி. சிபி சாய் சௌந்தர்யன் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார் முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்
இந்த நிகழ்வில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், தாலுகா, சாணார்பட்டி, தாடிக்கொம்பு, நத்தம், சின்னாளப்பட்டி, அம்பாத்துரை உள்ளிட்ட காவல் நிலையங்களின் சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்