சிவகங்கை,மார்ச் 25
செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளான அபர்ணா.சா, தெர்ஷினா.R.M, கௌசிகா.க,ஹேமலதா.வை தங்கள் திட்டத்தின்கீழ் உலகம்பட்டி கிராமத்தில் திரவ உயிர் உரம் பயன்படுத்தும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.மேலும் திரவ உயிர் உரத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் பற்றியும் கூறினர். இதனைப் பயன்படுத்துதல் மூலம் மண்ணில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறித்தும் கிராம மக்களிடம் எடுத்துரைத்தனர் . திரவ உயிர் உரம் பொதுவாக நெல்,பயறு வகைகள்,பருத்தி, காய்கறிகளுக்கும் பயன்படுத்தலாம்.



