காட்டு புதூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் – பூதப்பாண்டி – ஜனவரி -23 – பூதப்பாண்டியை அடுத்துள்ள காட்டு புதுர் ஊராட்சியை அழகிய பாண்டிபுரம் பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து. அப்பகுதி மக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினார்கள்
காட்டுப்புதூர் ஊராட்சியில் உள்ள ஆறு சுற்று வட்டார கிராமங்களையும் அழகிய பாண்டிபுரம் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்வதாக கூறி அதற்கு காட்டுப்புதூர் ஊராட்சி மக்கள் பேருந்து நிலையம் அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இது குறித்து கூறும்போது எங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைத்தால்100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நூற்றுக்கு மேற்பட்ட முதியவர்களும், பெண்களும் பயன் பெற்று வருகின்றனர். அந்த நிலை தடைப்படும் எனவும் மேலும் வீட்டு வரி, நிலவரி, மின் கட்டணம், தொழில் வரி கூடும் எனவும் தெரிவித்து இன்று காட்டுப்புதூர் சுற்றுவட்டார கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான து பின்னர் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடம் வந்து போராட்டகாரர்களிடம் சமரசம் பேசி பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது