திண்டுக்கல்லில் நவாமரத்துப்பட்டியில் உள்ள ஸ்ரீ சாய் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கபாடி போட்டி பரிசளிப்பு விழா.
திண்டுக்கல் நவாமரத்துப்பட்டியில் உள்ள ஸ்ரீ சாய் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கபாடி போட்டியில் 15 அணிகள் பங்கு பெற்றன. இறுதிப் போட்டியில் GTN கலைக் கல்லூரி,RVS கல்லூரி விளையாடியதில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் GTN கலைக்கல்லூரி அணிக்கு மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் Dr.Ln.N.M.B. நாட்டாண்மை காஜாமைதீன் கலந்து கொண்டு பதக்கம், சான்றிதழ் மற்றும் சூழற்கோப்பையை கொடுத்து வாழ்த்தினார். இந்நிகழ்வில் முத்தநாயக்கன்பட்டி பேங்க் ஆஃப் இந்தியா மேலாளர் மகேந்திரன், கல்லூரி நிர்வாக அலுவலர் D.ஸ்டாலின், முதுகலை முதல்வர் A.P.பிரான்சிஸ், இளங்கலை முதல்வர் T.S.ஜான் வின்சென்ட், துணை முதல்வர் V.சிவரஞ்சனி, உதவி பேராசிரியர் தாரணி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.