தருமபுரியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில அளவிலான பேரவை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வடிவேல் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பரமசிவம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 70 வயது நிரம்பியதும் 10 சதவீகிதழும், 80 வயது நிரம்பியதும் மேலும் 10 சதவீகிதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக முழுவதும் அரசு பேருந்துகளில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டையில் பயனாளியின் புகைப்படத்துடன் அவரது மனைவியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மோகன், மாதவன், வேணுகோபால், வெங்கடாஜலம், திருமேனி நாதன், பக்கிரி சாமி, செல்வராஜ், பார்த்தசாரதி, அப்புராஜ், பசுபதி, முருகேசன், சக்திவேல்,வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.



