நாகர்கோவில் ஜன 07
தமிழ்நாடு முதுநிலை தடகள சங்கமும்,மதுரை மாவட்ட முதுநிலை தடகள சங்கமும் இணைந்து நடத்திய 45 வது மாநில அளவிலான தடகள போட்டியானது கடந்த 03.01.2025 ம் தேதி முதல் 05.01.2025 வரை மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் கீதா 100 மீட்டர், 400 மீட்டர் தடை தாண்டும் போட்டி மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றார்.
இப் போட்டிகளில் வெற்றி பெற்ற உதவி ஆய்வாளர் கீதா நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் இடம் வாழ்த்து பெற்றார். வெற்றி பெற்ற பெண் உதவி ஆய்வாளரை எஸ் பி வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.