வேலூர்=02
வேலூர் மாவட்டம், வேலூர் கருணீகர் முன்னேற்ற சங்கம் சார்பில் (2025 -2028) ஆம் ஆண்டிற்கான மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேலூர் விருப்பாட்ச்சிபுரம் அருட்பெருஞ்ஜோதி மாளிகை சங்கம் கட்டிடத்தில் தேர்தல் அலுவலர் டி. கங்காதரன் தலைமையிலும், மாநிலத் தலைவர் டாக்டர் ஆர் .ஜனார்த்தனன், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பி குமரேசன் தலைவர் செல்வமணி முன்னாள் பேராசிரியர் டாக்டர் ரத்ன நடராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். குப்புசாமி மாநிலத் தலைவர் மாநில பொருளாளர் கோபிகா ரமணன் மாநில பொதுச் செயலாளர் குமரேசன் மாநில அமைப்பு செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் புதிய மாநில நிர்வாகிகளாக பதவி ஏற்று கொண்டனர்.