குளச்சல் ஜூலை 11
குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட 18-ம் வார்டில் மழைநீர் வடிகால் ஓடை பணிகள் ஒரு சில மாதங்களாக பணி பெற்று வந்த நிலையில் அந்தப் பணியானது அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
நிறுத்தி வைக்கப்பட்ட மழைநீர் கழிவுநீர் ஓடை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பல முறை தின தமிழ் பத்திரிக்கை செய்தி வெளியிடு செய்யப்பட்டு இருந்தது. அதன் படி கிடப்பில் போடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் ஓடைப்பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு முழு வீச்சில் பணி நடைபெற்று வருகிறது. தின தமிழ் பத்திரிகை செய்தி எதிரொலியால் கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் தொடங்கப்பட்டதற்கு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி குளச்சல் நகர நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் தின தமிழ் பத்திரிகைக்கு தங்களுடைய நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.