திருப்பத்தூர்:பிப்:07, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவவலக வளாகத்தில் பொதுமக்களுக்கான 2025- ஆம் ஆண்டின் முத்திரைக் கட்டண சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
இம்முகாமிற்கு வேலூர் தனித் துணை ஆட்சியர்( முத்திரை கட்டணம் ) சீதா பொறுப்பு தலைமை வகித்தார். வேலூர் தனி வட்டாட்சியர் (முத்திரை கட்டணம்) பாலமுருகன், திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.
இம்முகாமில் திருப்பத்தூர் 1- இணை எண் சார் பதிவாளர் ராம்குமார்(பொறுப்பு) , திருப்பத்தூர் 2-எண் சார் பதிவாளர் சர்மிளா, ஜோலார்பேட்டை சார் பதிவாளர் பிரீத்தி (பொறுப்பு) ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 47A(1) ,47A(3) மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட 1.1.2025 முதல் 31.3.2025 வரை சிறப்பு முகாம் நடத்திட சென்னை பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கையின் பேரில் சார் பதிவாளர் அலுவவலக வளாகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண அடிப்படையில், வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்யும் வகையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் பதிவு செயதவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் எண்-1, எண்-2, ஜோலார்பேட்டை -3 , ஆகிய பகுதிகளுக்கு உட்பட்டவர்கள் தங்களின் ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய குறைவு முத்திரை மற்றும் வட்டி தொகையினை செலுத்தி ஆவணங்களை பெற்றுச் சென்றனர்.
இம்முகாமில் உதவியாளர்கள் ஜெகந்நாதன், கோபி என பலரும் கலந்து கொண்டனர்.
முத்திரை கட்டணம் மற்றும் வட்டியினை வேலூர் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கட்ட வேண்டியதை பயனாளர்களின் நலனுக்காக திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.