மயிலாடுதுறை பிப்.10
பட்டவர்த்தி புத்தகரம் ஸ்ரீ பச்சை நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த பட்டவர்த்தி புத்தகரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பச்சை நாச்சியம்மன்,மதுரை வீரன்,திருக்கோயில் அமைந்துள்ளது.கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 07 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன்,முதல் கால யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது இன்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து.பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்க, கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த கும்பாபிசேகத்தில் மதுரை நிலையூர் ஆதினம் A.J. குமாரவேல் நாயனார், சித்தர்கள் திருச்சபை கரூர் மாதேஸ்வரன் சுவாமிகள், திரைப்பட பாடல் பாடலாசிரியர் நந்து தாசன். ஆகியோரும், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.