ஸ்ரீ முனிஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
மயிலாடு துறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த ஆழ்வார் குலம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ சாலக் கரை முனிஸ்வரன் ஆலயம். கிராம தெய்வமாக 200 ஆண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ சாலக் கரை முனீஸ்வரன் ஆலய சித்திரை பெருவிழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி, சிவாச்சாரியார்களை கொண்டு சிறப்பு ஹோமம் – பூஜைகள் நடைபெற்று, பம்பை உடுக்கை முழக்க முனிஸ்வரனுக்கு அபிசேக ஆராதனை நடைபெற்றது.. இந்த சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் முனிஸ்வரனின் அருளை பெற்றனர்.