தருமபுரி அடுத்த வி. ஜெட்டி அல்லியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில், ஸ்ரீ மாரியம்மன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சுதா ரமேஷ் இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் விக்னேஷ் கோயில் அர்ச்சகர் முன்னிலையில் திருவிழா நடைபெற்றது. பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். கூல், மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டை செல்வம் கோவில் தர்மகர்த்தா, ஜெயராமன், மணி, முருகன், பாண்டியன், சுந்தரலிங்கம், சக்திவேல் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்தனர்.



