மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியில் சக்கிமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ மகா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்க உத்தேசிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் உரிமையாளர் மு.மகாலிங்கம்
ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவை
திமுக மாவட்ட சேர்மன் கலாநிதி மாவட்ட இளைஞரணி இளங்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தனர்.
இந்த சேவையானது பொதுமக்கள் நலன் கருதி நீர் மோர் தர்ப்பூசணி பழங்கள் உள்ளிட்ட குளிர் பானங்கள் இன்று முதல் ஒரு மாதத்திற்கு காலை 11.00 மணி முதல் மாலை 3.00 வரை தொடர்ந்து வழங்கப்படும் என மகாலிங்கம் தெரிவித்தார்.
இதில் பள்ளி மாணவச் செல்வங்கள் பொது மக்கள் என தினசரி சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.