தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீ னம் 27-ஆவது குருமகா சந்நிதா னம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவா மிகள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் குரு முதல்வர் ஸ்ரீகுருஞான சம்பந்தர் குரு பூஜை விழா மற்றும் ஞானபுரீசுவரர் கோயில் பெருவிழா மே 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் கருத்தரங்கம், ஆய்வரங்கம் சொல்லரங்கம், சமய பயிற்சி வகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளும், சுவாமி வீதியுலா காட்சிகளும் நடைபெற்றன. முக்கிய நிகழ்வுக ளாக மே 13-ஆம் தேதி சகோபுர தரிசனம், மே 15-இல் திருக்கல்யா ணம், மே 17-இல் தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தருமபுரம் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீகுருஞா னசம்பந்தரின் குருவான கமலை – ஸ்ரீ ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாளையொட்டி, தருமபுரத் தில் உள்ள முந்தைய ஆதீனங்க ளின் குருமூர்த்தங்களுக்கு தருமபு ரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று வழிபட்டார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, திங்கள்கிழமை இரவு பட்டணப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக, காலையில் சொக்கநாதபெருமான் வழிபாடு, ஞானபுரீசு வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு, மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. இரவு தருமபுரம் ஆதீ னம் திருஆபரணங்கள் அணிந்து ஆதீன தம்பிரான்கள், திருக்கூட் டத்து அடியவர்கள் புடைசூழ சிவிகையில் (பல்லக்கு) எழுந்தருளினார். யானை, குதிரை உள் ளிட்டவை முன்செல்ல, சிவ கயிலாய வாத்தியங்கள், நாகசுர மேள தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீன கர்த்தர் பல்லக்கில் அமர்ந்து ஆதீனத்தின் சிவம்பெ ருக்கும் நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
அப்போது, பொதுமக்கள் அவருக்கு தீபாராதனை காட்டி வழி பாடு மேற்கொண்டனர். அதிகாலை மீண்டும் ஆதீனத்திருமடத்தை அடைந்த குருமகா சந்நிதானம் ஞானக்கொலுக்காட் சியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
பட்டணப் பிரவேச நிகழ்வில் மதுரை ஆதீனம் 293-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரி ஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நாச்சியார் கோயில் ஆதீனம் குருமகா சந்தி தானம் ஸ்ரீலஸ்ரீ சிவசுப்ரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் 234-ஆவது குருமகா சந்நிதானம் சிசும்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி இளைய ஆதீனம் அஜபா நடேஸ்வர சுவாமிகள், திண்டுக்கல் ஸ்ரீசிவபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீல ஸ்ரீ திருநாவுக்காசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.