சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் சொக்கையன் பட்டி மற்றும் கீரனூருக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சின்னையன் கோவில் ஒவ்வொரு வருடமும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சின்னையன் கோவில் சாமி கும்பிடும் பங்காளிகள் ஒன்று இணைத்து இக்கோயிலை பெரிய அளவில் கட்ட வேண்டும் என ஒரு மனதாக முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் கோவில் பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.