தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், வெங்கட்டம் பட்டி காண்ட்லா செட்டியார் சமூகத்தினர் நடத்தும் 17-ஆம் ஆண்டு ஸ்ரீ பட்டாபிராமர் திருக்கோவிலில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ பட்டாபி ராமருக்கு விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ சீதா ராமர் திரு கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.சீனிவாச ஐய்யங்கார் கோயில் அர்ச்சகர், ராமலிங்கம் ஊர் செட்டியார், சிவக்குமார் ஊர் செட்டியார், குணசேகரன் கோவில் தர்மகர்த்தா மற்றும் விழா குழுவினர்கள், காண்ட்லா செட்டியார் சமூகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



