மதுரை மத்திய சிறையில் சுமார் 2300 சிறைவாசிகள் உள்ளனர் .இவர்களது உடல் நலனை பேணிக்காக்கும் வகையில் சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஸ்வரர் தயாள் .ஐபிஎஸ் சிறப்பு இருதய மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய சிறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் மதுரை மத்திய சிறையில் மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து இருதயம், கண் ,எலும்பு, மற்றும் பொது மருத்துவ சிறப்பு சிகிச்சைக்கு மதுரை மத்திய சிறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவ முகாம் அக்டோபர் 17, 18 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் சிறைவாசிகளுக்கு இசிஜி மற்றும் மாரடைப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மீனாட்சி மிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் மாரீஸ்வரன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு சிகிச்சை அளித்தனர். அதன் துவக்க விழா மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் பழனி தலைமையில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
மத்திய சிறையில் சிறப்பு இருதய மருத்துவ முகாம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics