தஞ்சாவூர் நவ.13.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 4 நாட்கள் நடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி களில் 2,311 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய ஏதுவாக சிறப்பு முகாம் வருகிற 16, 17 ,23 ,24 ஆகிய நான்கு நாட்களில் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.
முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியல் சேர்த்துட படிவம் என் 6 ஐ பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம் 6 பி யை பூர்த்தி செய்தும், இறப்பு நிரந்தர மாக இடம் பெயர்ந்தவர்கள் இரட்டை பதிவு போன்ற காரணங் களால் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 யை பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் அனைத்து வகையான திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள படிவம் 8 யை பூர்த்தி செய்தும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.
இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள இயலாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் வருகிற 28ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5:45 வரை தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.inஎன்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலமாக விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5:45 வரை தொடர்பு கொள்ளலாம்
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.