நாகர்கோவில் ஜூன் 28
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, மார்த்தாண்டம், குலசேகரம், பெருஞ்சாணி உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருவதால் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 3511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே போன்று பெருஞ்சாணி அணைக்கு 2133 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையினுடைய நீர் பிடிப்பு பகுதியில் இருந்து முக்கிய இரண்டு அணைகளுக்கும் 5600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து 3700 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி வருகிறது.



