தென்காசியை சேர்ந்த ஸ்ரீ முகுந்தன் என்ற 9 வயது சிறுவன் கண்களை கட்டி கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் கடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
தென்காசியை சேர்ந்த ரெங்கநாதன், காயத்ரி தம்பதியின் மகன் ஒன்பது வயது சிறுவன் ஸ்ரீ முகுந்தன் இவர் சிறு வயது முதலே ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறார். பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற நிலையில் குத்துக்கல்வலசை பகுதியில் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் மற்றும் செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து சிறுவனின் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியை நடத்தினர்.
தென்காசி குத்துக்கல்வலசை பண்பொழி ரோடு பகுதியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கண்களை கட்டிக் கொண்டு தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மூலம் கடந்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார். இவரது சாதனை முயற்சியை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் ஹரிஹரன், அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் புதிய பாஸ்கர், தாளாளர் கல்யாணி, யுனிவர்சல் புக் ஆஃப் ரெகார்ட் ஒருங்கிணைப்பு குழு சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரி சுதா வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளர்களாக இலத்தூர் காவல் உதவி ஆய்வாளர் தாமரைலிங்கம், குங்ஃபூ பயிற்சியாளர் ராம்ராஜ் கலந்து கொண்டனர். ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ் நன்றியுரையாற்றினார்
சாதனை நிகழ்ச்சியின் போது அவசர ஊர்தி , காவல் பாதுகாப்பு என பல்வேறு முன்னேற்பாடுகள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த சாதனை நிகழ்ச்சியில் யோகா, ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள், உறவினர், பொதுமக்கள் என பலர் உற்சாகப்படுத்தி சிறுவனை பாராட்டினர்.