சிவகங்கை: மார்ச்:23
சிவகங்கையில் அனைத்து இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் . ஆர்ப்பாட்டத்திற்கு வி. ரம்யா தலைமை தாங்கினார் . ஞானசுந்தர், செல்வ கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தற்காலிக வங்கி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் . புதிய நியமனங்களை காலதாமதப்படுத்தாமல் நியமனம் செய்ய வேண்டும் . பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் . மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூபாய் 25 லட்சம் வழங்கப்படுகிறது . அதே தொகை வங்கி ஊழியர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் . ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் ஜி.சக்திவேல் , ஏ.அலெக்ஸ்வினோத் , பொதுச்செயலாளர் பிரேம்ஆனந்த் ஆகியோர் பேசினார்கள் . முடிவில் விஜயசூர்யபிரகாஷ் நன்றி கூறினார் .
சிவகங்கை வங்கி ஊழியர்கள் அடையாள ஆர்ப்பாட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics