சென்னை. செப்டம்பர்- 29,
உலக இதய தினத்தித்தில் இதய ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சிம்ஸ் மருத்துவமனை” சிம்ஸ் வாக் 4 ஹார்ட் ” என்னும் வாக்கத்தான் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை வடபழநி சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கி கோயம்பேடு வழியாக அண்ணாநகர் வி.ஆர் மாலில் முடிவுற்றது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் அட்டகத்தி தினேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி குறித்து நடிகர் அட்டகத்தி தினேஷ் பேசுகையில் “இதய ஆரோக்கியம் என்பது முழுமையான நல் வாழ்க்கையின் முக்கிய அங்கம் ஆகும். சிம்ஸ் மருத்துவமனை நடத்தும் இந்த வாக் 4 ஹார்ட் என்னும் நிகழ்ச்சியின் முயற்சிகளுக்கு நான் உதவுகிறேன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடப்போம். இது குறித்து விவாதிப்போம். இதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவோம் ” என்று கூறினார்.
சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி சிம்ஸ் வாக்4 ஹார்ட் வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு பங்கேற்பாளர்கள் அதிகம் பேர் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் என்றார் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தமது அர்ப்பணிப்பை உறுதியாக எடுத்துக்காட்டுகிறது சிம்ஸ் மருத்துவமனை என்று சொல்லலாம்.
சிம்ஸ் வாக் 4 ஹார்ட் வாக்கத்தான் ஆனது வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கி விஆர் மாலில் நிறைவடந்தது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் அட்டகத்தி தினேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி குறித்து நடிகர் அட்டகத்தி தினேஷ் பேசுகையில் இதய ஆரோக்கியம் என்பது முழுமையான நல் வாழ்க்கையின் முக்கிய அங்கம் ஆகும். சிம்ஸ் மருத்துவமனை நடத்தும் இந்த வாக் 4 ஹார்ட் என்னும் நிகழ்ச்சியின் முயற்சிகளுக்கு நான் உதவுகிறேன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடப்போம். இது குறித்து விவாதிப்போம். இதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறினார் .
சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி பேசியதாவது:-
சிம்ஸ் வாக்4 ஹார்ட் வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு பங்கேற்பாளர்கள் அதிகம் பேர் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்
மக்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், வழக்கமான உடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு தனிநபரும் தங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஊட்ட நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். அதற்கேற்ப ஆரோக்கியமான சமூகத்தை வளர்ப்பதில் எங்களது உறுதியின் வலிமையை இந்த அர்ப்பணிப்பு மிக்க நிகழ்ச்சி வலுயுறுத்துகிறது என்றார்.