திருப்பூர் ஜூலை: 4 செராங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ்- டாக்டர். நளினி ஆகியோர்களின் மகள் நஹ்ஷத்திரா( வயது-12). இவர் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கராத்தே போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி நஹ்ஷத்திரா மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வென்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில்,
கடந்த வாரம் ஜூன் 28ந் தேதி முதல், 30ந் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டார்.
அதில் இந்தியா ., பங்களாதேஷ்., பாகிஸ்தான்., ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா என 15 நாடுகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் இருந்து 32 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
12 வயதிற்கான போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் நஹ்ஷத்திரா வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து, வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
மலேசியா சென்று இந்தியவிற்க்கும், தமிழ்நாடு திருப்பூருக்கும் பெருமை சேர்த்த மாணவி பெற்றோர் மற்றும் பாட்டியுடன் சென்னையில் இருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்த அவருக்கு ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு பள்ளி மாணவிகள், ரயில் பயணிகள் பொதுமக்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.