காரியாபட்டி ஆகஸ்ட் 24
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கல்குறிச்சி
ஓம் சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் சார்பாக மகா சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
கடந்த 14 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாள் நடைபெற்றது.
9 நாட்கள் விநாயகர் பெருமானுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இரவில் சுவாமி வீதி உலா வந்து பத்தர்களுக்கு காட்சி தரும் வைபவமும் சக்தி விநாயகருக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்களும் அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹா சங்கடஹர சதுர்த்தி அன்றைய தினம் விநாயகருக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது விழாவில் பங்கேற்ற பக்தர்கள்
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
10 நாட்கள் நடைபெற்ற மஹா சங்கட சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.