சோழவந்தான் மே 26
அதிமுக
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் மற்றும் அம்மா பேரவை சார்பில் தொடர்ந்து 100 திருக்கோயில்களில் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் சிறப்பு பிராத்தனை, 100 கிராமங்களில் மாபெரும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் அதிமுகவை சார்ந்த 1000 மூத்த முன்னணியினர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை (பொற்கிழி) வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம் தலைமை தாங்கினார்,
வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன், பேரூர் கழகச் செயலாளர்கள் முருகேசன்,
அழகுராஜா, அசோக்குமார், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து
மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி ஊக்கத் தொகையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும்,
அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயளாலர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் இ.மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரகள் தமிழரசன் ,ஏகேடி.ராஜா, மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், விரகனூர் ராமகிருஷ்ணன், அன்னபூர்ணா தங்கராஜ், ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் சி. முருகன், வக்கீல் திருப்பதி,
வக்கீல் தமிழ்செல்வன், பஞ்சவர்ணம், உஷா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, அன்பழகன், ராமசாமி, ராமையா, கண்ணன், பிரபுசங்கர், நகர செயலாளர் பூமா ராஜா,மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழ் அழகன், பால்பாண்டி, காசிமாயன், மகேந்திர பாண்டி, சரவணபாண்டி, செல்லம்பட்டி ரகு ,சிவசக்தி சிங்கராஜ பாண்டியன், வக்கீல் துரைப்பாண்டி ,பொதுக்குழு உறுப்பினர்கள் நாகராஜ், சுதாகரன், சுமதி சாமிநாதன் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதி நிர்வாகிகள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளைக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் இளைஞரணி மாவட்ட இணைச்
செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.